குகைக் குறியீடுகளைப் பயன்படுத்திய பொழுதே உலகின் முதல் தொலைத் தொடர்பு தொடங்கியதாகக் கருதப்படுகிறது. இதன்படி குறியீடுகளை ஓரிடத்திலிருந்து வெகு தொலைவிற்கு, ஒரு தகவலைச் சொல்லும் விதமாகப் பயன்படுத்தியதே தொடர் பாடல் மேலும் தொலைத் தொடர்பின் தோற்றத்தைக் குறிப்பதாக அமைந்தது. ஆப்ரிக்காவிலும் ஆசியாவிலும் அமெரிக்காவிலும் தகவல் தெரிவிக்கும் ஒரு ஊடகமாக முரசு பயன்பட்டது. இதன் தொடர்ச்சியாக கி.பி.1790இல் ஐரோப்பாவில் விளக்கக் கைகாட்டி மரம் நிறுவப்பட்டு முதல் தொலைத் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. கி.பி.1830இல் மின்னணுவால் ஆன தொலைத் தொடர்பு முறை நிறுவப்பட்டது.
தொலைத்தொடர்பு முறையின் காலக்கோடு
கீழக்காணும் அட்டவணை மூலம் வரலாற்றுக் காலம் தொடங்கி, இன்றுவரைத் தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்பட்ட சில ஊடக முறைகளை விளங்கிக் கொள்ளலாம்.
| முறை | வரலாற்றில் முதன்முறையாக பயன்படுத்திய நாடு | காலம் | இறுதியாக பயன்படுத்திய பகுதி | காலம் |
|---|---|---|---|---|
| புறாக்கள் மூலம் தூது அனுப்புதல் | எகிப்து | கிமு.2900 | கலிபோர்னியா | கிமு.1981 |
| மனிதர்கள் ஓட்டமாக செல்லுதல் | எகிப்து | கிமு.1928 | போனி எக்ஸ்பிரஸ் | கிமு.1860 |
| விளக்குகள், பந்தங்கள் | ட்ரோய் | கிமு.1184 | இங்கிலாந்து | கிமு.1588 |
| சமிக்ஞைக் கம்பங்கள் | பெர்ஷியா | கிமு.400 | ஜெர்மனி | கிமு.1796 |
| ஹீலியோ கிராப்கள் | கிரேக்கம் | கிமு.400 | அரிசோனா | கிமு.1886 |
| கொடிகள் | கிரேக்கம் | கிமு.400 | கடல் பயணங்களில் இன்றும் பயன்படுகிறது. | இன்று வரை தொடர்கிறது |
தொலைத்தொடர்பு முறைகள் :
| காலம் | எடுத்து உருவாக்கம் |
|---|---|
| கி.மு.3000 | காகிதக் கூழ் உற்பத்தி |
| கி.மு.59 | கணினிகள் முதலாவது செய்தித்தாள் ஜூலியஸ் சீசரால் நிறுவப்பட்ட ஆக்ரா டையூரனா |
| கி.பி.100 | காகிதம் |
| கி.பி.1000 | பேனா,முதலாவது சீன ஆட்சி இயந்திரம் |
| கி.பி.1400 | முதலாவது ஐரோப்பிய ஆட்சி இயந்திரம் (ஜோகன்ஸ் கூப்பன்பெர்க்) |
| கி.பி.1500 | பென்சில்கள் |
| கி.பி.1800 கள் | டைப்ரைட்டர் |
| கி.பி.1960 கள் | கணினிகள் |